எவனோ ஒருவனல்லன்
உடன் பிறக்காதவன்
உயிரால் இணைந்தவன்
உள்ளம் கலந்தவன்
மறந்தால் எதிர்ப்பவன்
மனதால் கவர்ந்தவன்
எதிர்ப்புகள்
எத்துனைகொள்ளினும்
துருப்பாய் எனைக்
காப்பவன்
கடைசிக்
கண்ணிமைப்பிலும்
இறுதி சுவாசத்திலும்
கூட உனை
எதிரியாய் காணாதவன்
*எவனோ ஒருவனல்லன்*
கர்வம் கொள்ளாதவன்
கண்டும் காணமல்
செல்லாதவன் - கையில்
இருப்பதைப் பகிர்பவன்
பசுந்தோல் போர்த்தாதவன்
பகைமை இல்லாதவன்
முகத்திரை கொள்ளாதவன்
நினைவில் மட்டுமல்ல
நிஜத்திலும் நிலையானவன்
*எவனோ ஒருவனல்லன்
அவனே
என்னுடைய
எனக்கான
என்
" நண்பன் "