உன்னால் நான்
பூத்துக்குலுங்கும் என் மனதின்
மருமுகமே உன் புன்னகை
உன் புன்னகைக்கு இணை ஈடினும்
இவ்வுலகில் இல்லையே தேடினும்...
வெற்றுக்காகித நிலைபோல
நான் வீனாய்க்கிடந்தேன் நிலையாக
தொட்டுப்பேசி என் வலி உணர்ந்து
என் விதியை திருத்தி எழுதிவிட்டாய்...
கண்களை மூடினான் உறங்கினும்
கனவிலும் உந்தன் நினைவடி
கண்களை விழித்துனான் காண்பினும்
நினைவிலும் உந்தன் கனவடி...
புவியில் நானும் வாழ்வது
உன் நட்பின் நிழலில்தானடி
உன் நிழலாய் நானும் மாறிட
மனம் நித்தமும் சத்தம் போடுதடி...