மரணத்தின் அணைப்பு - நிலைமண்டில ஆசிரியப்பா

’மரணம்’ அவனால் முடிந்த அளவு
அழகனாக, அப்பாவி யாக வந்தான்;
அவன்யா ரென்று எனக்குக் காட்டவே
முகத்தை மறைத்து வரவில் லையே! * 1

ஒருமனிதன் எப்படி இருப்பானோ அப்படி
அவன் அமைதியாக, சம்ர்த்தாக இருந்தான்!
என்னைத் தாண்டி அவன்கண் சிமிட்டும்
போது கண்களில் ஏக்கமிருந் ததோ! * 2

அவன்மிக அழகாக, கருணை வழிய
அறையின் குறுக்கே நடக்கும் போது,
ஊழ்வினைக் குள்ளே ரகசியமாய் இழுக்கையில்
என்னைப் பார்த்துப் புன்னகைசிந் தினானே! * 3

மரணம் விசித்திர மானது; இருளில்
இன்னும் வசீகர மானது; முதன்முறை
அவனை சந்தித் ததனால் என்னையவன்
நடனம் ஆடச் சொல்லிக்கேட் டானே!* 4

கதகதப் பானஅவன் கைகளில் எடுத்து,
கல்லறைக் குள்என்னை அணைத்துக் கொண்டான்;
மரணம் தவிர்க்க இயலாத மருட்சி;
எனக்கது என்றும் வேண்டும் என்றே; * 5

அவனறிவான்; இதமான அணைப்பில் தொடங்கி
குளிர்ந்த முத்தத்தில் முடிவுக்கு வந்தது;
மரணமும் நானும் அறிவோம் எங்களை
எக்காலமும் பிரிக்க முடியா தென்பதை! * 6

(ஆசிரியப்பாவின் இறுதிச்சீரின் இறுதியசை ஏ, ஓ, என், ஆய், ஐ ஆகியவற்றில் ஒன்றைக் கொண்டு முடிய வேண்டும்)

ஆதாரம்: Poet Ophelia moore என்பவர் எழுதிய Death’s Embrace என்ற கவிதை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-14, 11:46 am)
பார்வை : 140

புதிய படைப்புகள்

மேலே