பூக்காரியின் கிண்டல் சென்ரியு

*
அழுகின்ற குழந்தையை
அடித்தால் அழுகை நிறுத்துமா?
அடிப்பது தாயின் வன்முறை.
*
தாழ்ந்துக் கிடப்பது தெரியாமல்
கண்கள் மூடிப் பிடித்திருக்கிறாள்
சமநீதி தராசு.
*
மல்லிகைப் பூவைக் கேட்டார்
முதியவரைத் தினுசாய் பார்த்து
கிண்டலடித்தாள் பூக்காரி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (2-Jun-14, 4:30 pm)
பார்வை : 237

மேலே