மறந்துவிடும்

இன்று நீ விட்டு செல்வது
நாளைய தலைமுறை
எடுத்துக் கொள்வது.... ....

நீ ஓடிய குதிரையின்
கால்களை முடமாக்கி போனால்

அவன் ஓடாத குதிரையைதான்
உலகென்று காண்பான்.........

இன்று நீ
காக்க மறந்தால் ஆடிக்கொரு
முறை அம்மாவாசைக்
கொரு முறை
பொழியும் மழைக்கூட

ஆடிகளையும் அம்மாவாசைகளையும்
மறந்துவிடும்........

எழுதியவர் : அகிலா (2-Jun-14, 5:32 pm)
Tanglish : maranthuvidum
பார்வை : 79

மேலே