akila kavi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : akila kavi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-May-2014 |
பார்த்தவர்கள் | : 181 |
புள்ளி | : 21 |
கவிதைகள் ரசிப்பவள்
கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே
..............................................................................
எதுகை மோனையில்
கவிதை வாழலாம்
ஏற்றத் தாழ்வுகளில்
கவிஞன் வாழ்கிறான்
............................................................................
கவிஞன் சொல்வதற்கும்
பிறர் ஏற்பதற்கும்
இடையில் பிரபலம்
ஒன்று நிற்கிறது
.........................................................................
கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான்
...............................
கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே
..............................................................................
எதுகை மோனையில்
கவிதை வாழலாம்
ஏற்றத் தாழ்வுகளில்
கவிஞன் வாழ்கிறான்
............................................................................
கவிஞன் சொல்வதற்கும்
பிறர் ஏற்பதற்கும்
இடையில் பிரபலம்
ஒன்று நிற்கிறது
.........................................................................
கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான்
...............................
அருகருகே இருந்தும்
முகம் பாரா வலிமை கொண்டாய்
என்னுள் நானறியா
வலியை தந்தாய்
தவறிழைத்ததாரோ......?
தடுமாறி விழுகிறேன் நானோ
ஏதுமில்லை என்றாயே என்னுள்
யாதுமாகி நின்றாயே
வலிகள் புதிதல்ல எனக்கு
இருந்தும்
இவ்வலி தான் புதிதாய்
இருக்கு
அன்றாட பாதையில்
வழிமாறி போகிறேன்
அடக்கி வைத்து பார்த்தும்
விழித்தூறல் காண்கிறேன்
வெறுமை தனை பரிசாக
கொடுத்து விட்டு
உரிமை தனை பறித்துச்
செல்கிறாயே
காதல் வலி சிறிது
அடே நண்பா நட்பின்
வலி கொடிது
உணர்ந்தேனடா
பொய்கள் பேசுகிறது
வானம்
அழகழகாய் பல ஓவியங்களை
தீட்டி
ரசனைகளை தூண்டிவிட்டு
ரசித்திருக்கும் வேளையில்
அட போ என
அழித்து விடுகிறதே
எத்தனை எத்தனை
ஓவியங்கள்
சீராட்டும் தாய்
பாராட்டும் தந்தை
இடைக்கால காதல்
வசந்தம் போன்ற நட்பு
என எத்தனையோ அழகோவியங்கள்
கண்முன்பே அழிபடுகிறதே
எதை உணர்த்துகிறது
அந்த கடக்கும் மேகங்கள்
இதுதான் வாழ்வென்றா
இல்லை
இதில்தான் வாழ்வென்றா
பிரிவுகளை உறுதி செய்யும்
உனக்கு மறதி வரக்கூடாதா
காலமே இவ்வோவியங்கள்
காலமுள்ளவரை வாராதா
பொய்கள் பேசுகிறது
வானம்
அழகழகாய் பல ஓவியங்களை
தீட்டி
ரசனைகளை தூண்டிவிட்டு
ரசித்திருக்கும் வேளையில்
அட போ என
அழித்து விடுகிறதே
எத்தனை எத்தனை
ஓவியங்கள்
சீராட்டும் தாய்
பாராட்டும் தந்தை
இடைக்கால காதல்
வசந்தம் போன்ற நட்பு
என எத்தனையோ அழகோவியங்கள்
கண்முன்பே அழிபடுகிறதே
எதை உணர்த்துகிறது
அந்த கடக்கும் மேகங்கள்
இதுதான் வாழ்வென்றா
இல்லை
இதில்தான் வாழ்வென்றா
பிரிவுகளை உறுதி செய்யும்
உனக்கு மறதி வரக்கூடாதா
காலமே இவ்வோவியங்கள்
காலமுள்ளவரை வாராதா
பச்சை வயல்களுக்கிடையே
ஓர் ஒற்றையடி பாதை
கான்கிரீடுகளை அறியாத
களிமண் குடிசைகள்
தூக்கி எறிந்த கல்லை
ஒரே மூச்சில் எடுத்துவரும்
கிணற்று போட்டிகள்
எலந்தை பழத்திற்கும்
குண்டு நெல்லிக்கும்
அலைந்து திரிந்த காடுகள்
அணில் பிடிக்க வலைகட்டி
காத்திருக்கும் கோமண தாத்தா
ஒருபக்கம் அடைத்துவிட்டால்
மறுபக்கம் ஓடிவந்து
அகபட்டு நிற்கும் வயல் நண்டு
காணும் பொங்கலில்
பாட்டியின் தட்டை முறுக்கு
தாத்தாவின் வெள்ளை வேட்டி
சொக்காயுடனான மீசை முறுக்கு
காலில் விழுந்து பெற்ற
ஒன்று முதல் ஐந்து ரூபாய்கள்
பம்பரத்துடன்
பரபரப்பாய் இருந்த வீதிகள்
விளம்பரத்தில் கம்பீரமாய்
நின்ற தெருகூத்துகாரர்கள்
அஞ
வலி தரும் வேளையில்
முகமோ மறைக்கிறது
எதையும் தாங்குவதாய் இதயம்
பொய்யாய் துடிக்கிறது
காண்பவர் எல்லாம்
கல்நெஞ்சாய் நினைக்க
சொல் கொண்டு நஞ்சை
என்மீது தெளிக்க
பாழாய் போன கண்ணில்
கரிக்கும் நீர் இல்லை
உள்ளே அழுகிறேன்
துடித்து மடிகிறேன்
இருந்தும் வடித்து
துலைக்காது
நாகரீகம் காக்கிறேன்
பாசத்தை காட்டவும்
ரோசத்தை காட்டவும்
மகிழ்ச்சியை பகிரவும்
துக்கத்தில் கதறவும்
சொந்தங்கள் உண்டு ஆனால்
ஏனோ எண்ணங்கள் இல்லை
நான் என்ன
தோட்டத்தில் இருந்தும்
தனிமரமா......?
தனிமையை கட்டியழும்
உயிர் ஜடமா.......?
விளங்காத மனதோடு
விலங்காக வாழ்கிறேனா......? இல்லை
விளங்கியும் வெளிகாட்டாது
வி
வெற்றிக்கும் தோல்விக்கும்
இடையில் ஏதோ ஒரு
புள்ளியில் நீ
ஆதலால் சிரிப்பிற்கும் அழுகைக்கும்
இடையில் ஏதோ ஒரு
புள்ளியில் நான்
தன்னலம் அற்ற அன்பை
இயற்கை கொடுக்கிறது
ஆதலால் தான்
தன்னிகரற்றவன்
எனும் நம்
பண்பை
இன்னமும்
பொறுக்கிறது
இன்று நீ விட்டு செல்வது
நாளைய தலைமுறை
எடுத்துக் கொள்வது.... ....
நீ ஓடிய குதிரையின்
கால்களை முடமாக்கி போனால்
அவன் ஓடாத குதிரையைதான்
உலகென்று காண்பான்.........
இன்று நீ
காக்க மறந்தால் ஆடிக்கொரு
முறை அம்மாவாசைக்
கொரு முறை
பொழியும் மழைக்கூட
ஆடிகளையும் அம்மாவாசைகளையும்
மறந்துவிடும்........
இன்று நீ விட்டு செல்வது
நாளைய தலைமுறை
எடுத்துக் கொள்வது.... ....
நீ ஓடிய குதிரையின்
கால்களை முடமாக்கி போனால்
அவன் ஓடாத குதிரையைதான்
உலகென்று காண்பான்.........
இன்று நீ
காக்க மறந்தால் ஆடிக்கொரு
முறை அம்மாவாசைக்
கொரு முறை
பொழியும் மழைக்கூட
ஆடிகளையும் அம்மாவாசைகளையும்
மறந்துவிடும்........
வெய்யிலும் புகழ்ச்சியும்
தலையில் அதிகரிக்க அதிகரிக்க
நிதானம் எனும்
தண்ணீர்
தேவைபடுகிறது........