வானம் பொய் பேசுகிறதே
பொய்கள் பேசுகிறது
வானம்
அழகழகாய் பல ஓவியங்களை
தீட்டி
ரசனைகளை தூண்டிவிட்டு
ரசித்திருக்கும் வேளையில்
அட போ என
அழித்து விடுகிறதே
எத்தனை எத்தனை
ஓவியங்கள்
சீராட்டும் தாய்
பாராட்டும் தந்தை
இடைக்கால காதல்
வசந்தம் போன்ற நட்பு
என எத்தனையோ அழகோவியங்கள்
கண்முன்பே அழிபடுகிறதே
எதை உணர்த்துகிறது
அந்த கடக்கும் மேகங்கள்
இதுதான் வாழ்வென்றா
இல்லை
இதில்தான் வாழ்வென்றா
பிரிவுகளை உறுதி செய்யும்
உனக்கு மறதி வரக்கூடாதா
காலமே இவ்வோவியங்கள்
காலமுள்ளவரை வாராதா