தண்ணீர் தண்ணீர்

காலையிலே கண் விழிக்கும் முன்பே செவி ஓரம் ஒரு சத்தம்

என்ன தூக்கம் இன்னும் எழும்பலையா . .

கண் விழித்து பார்த்தால் கலர் கலராக நட்சத்திர கூட்டம் ( குடம்)

சங்கீத மழையில் நனையாவிட்டாலும் தினமும் இவர்களின் சண்டையில் சரி கம பதநி கேட்கிறேன் ..

ஒரு குடம் தண்ணீரை பன்னீர் போல் பாவித்து பதமாய் பிடிக்க வேண்டி உள்ளது . .

கோவிலில் கூட நான் இப்படி கால் வலிக்க நின்றதில்லை ..ஆனால் தெய்வத்தை விட தேவை அதிகமாக இருக்கிறது இந்த நிறம் இல்லா தண்ணீருக்கு ...

அந்த இரும்பு குழாயும் என் கண்களுக்கு நான் விரும்பும் காதலனாய் தான் தெரிகிறது...

அவன் கால தாமதமாய் வந்தால் அவனிடம் சண்டை இடுவேன் ஆனால் இவனிடம்(தண்ணீர் குழாய்) எதுவும் செய்ய முடிய வில்லை ...

நான் கோவித்து கொண்டால் அவன்( காதலன் )என்னை சமாதானம் செய்வான். ...
ஆனால் இவன் கோவித்து கொண்டால் நான் தான் இவனை ( த.குழாய் ) ரிப்பேர் செய்ய வேண்டி உள்ளது..

அவனை காதலிக்க குடம் குடமாய் கண்ணீர் விடுவேன் ..
ஆனால் இவன் என்னை காதலிக்க வில்லை என தெரிகிறது ...
ஒரு குடம் தண்ணீர் கூட விட கஷ்ட படுகிறான் ...

எழுதியவர் : vasu (8-Jul-15, 9:27 am)
Tanglish : thanneer thanneer
பார்வை : 72

மேலே