கனவே கலையாதே

பள்ளி வாசல்..ஒன்றின்
முன்னே ஒரு நோயாளி
படுத்திருக்கும் அவர் மீது ..
போர்வை ஒன்று ..!
.
அவர் பக்கத்தில் ..
முழங்காலிட்டு உட்கார்ந்திருக்கும்
என்னை..
பிறப்பால்
ஒரு இந்துவான என்னை..
..
இறைவனை வேண்டி..
ஓதி ..
அவர் மீது ஊதுங்கள்..
குணமாகி விடுவார்..
என்று சொல்லும்
ஒரு பக்கிரி ..
..
..
இவர்களெல்லாம்
என் கனவில்..
..
கனவு கலைந்து..
எழுந்தேன்....
எழுந்தாலும்..
விழிக்க வேண்டும் ..
நான் விழிக்க வேண்டும்!