அந்த சுகம் எங்கே
தென்றல் காற்றின் இதமான
குளிர் நம் மீது வீசும் ,
வண்ண வண்ணப் பூக்களின்
நறுமணம் கமழும்,
தோட்டத்தில் கத்தரி ,வெண்டை ,
புடலை ,பயறு ,பூசினி , மரவள்ளி ,
கீரை , வெங்காயம், மிளகாய் ,
அத்தனையும் இயற்கை சுவை
குன்றாமல் ,
வயல்களில் நெல்லு,கோதுமை,
கேப்பை ,சம்பா , கம்பு ,
வகை வகையாய் பயிர் வகைகள் ,
இது மட்டுமா தென்னை,
பனை , பலா ,நெல்லி, தோடை,
வாழை , மாமரங்கள் இத்தனையும்
சுவை மாறாமல் கனி வகைகள் ,
கிராமத்து வீடுகளில் கிணறுகளில்
நல்ல தண்ணீர் சுத்தமான காற்று
சுவாசிக்க இத்தனையும் அனுபவிக்க
நாம் கொடுத்து வைக்கவில்லையே ,
பட்டணத்து மோகம் படிப்பு நாகரீகம்
முன்னேற வேண்டுமென்ற அவா
இதனால் பறக்கின்றோம் பட்டணங்களுக்கும் மேலை நாடுகளுக்கும் ,
இயற்கை சுகம் எங்கோ போய் விட்டது
இங்கும் இல்லை எங்கும் இல்லை
அவசர உலகில் பறக்கின்றோம்
நாம் ஆசைப் பட்டபடி எல்லாம் கிடைக்கிறது
ஆனால் நோயற்ற வாழ்வைத் தவிர ,
எல்லாம் நிறைவாக இருந்தாலும்
ஒரு வித ஏக்கமும் தாக்கமும்
நமக்குள்ளே மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
வேதனைகள் நமக்குள்ளே,
பிள்ளைகள் விடுமுறையில்
ஆலாய்ப் பறக்கின்றோம்
கிராமத்திற்கு ஏன் விட்டுவந்த
செல்வங்களை அனுபவிக்க
சொந்தங்கள் பாசங்கள் உணர்ந்திட ,
இந்த இயற்கை சுகம் நமது
பிள்ளைகளுக்கு மட்டுமல்ல
அடுத்த தலைமுறைக்கும்
கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான்?