நிலவே

ஒளிசிந்தி விண்மீன்கள் உள்ளத்தை ஈர்க்கும்
களிப்புடனே கண்சிமிட்டிக் காட்டும் - நளினமாய்
பஞ்சுமுகி லுள்நுழைந்து பாசாங்கு செய்திடும்
மஞ்சோட மெல்லெழும்பும் காண் .