புரியாத உறவு
என்னை தேடி வந்த ஒரு உறவு நீ
என் ஒவ்வொரு நொடிப்பொழுதையும்
இனிமையாக்கிய ஒரு உறவு நீ
உன்னை என் கண் தேடும் பொழுதெல்லாம்
சிறு புன்னைகையுடன் எதிரே வந்து
நின்ற உறவு அல்லவா நீ
இறுதிவரை என்னை பின் தொடர்வாய்
என்றெல்லவா நினைத்தேன்
ஆனால் இன்று என்னை கண்டு
விலகி செல்லும் காரணம் என்னவோ
இன்று ஒவ்வொரு நொடி பொழுதும்
நரகமாய் நடை போடுகிறது என் வாழ்வில்
புரியாமல் தவிக்கிறேன் அறியாத காரணத்தால்
என் தவிப்பை நீ அறிய வாய்ப்பில்லை
ஒரு வேளை என் தவிப்பை நீ அறிந்தால்
விரைந்து வா என்னிடம்
காத்த்திருப்பேன் உன் அன்புக்காக்காக