வாடிய மலராகிவிட்டேன்

வசந்தத்தைதானே
வண்டினங்கள் தேடிவரும்
வறண்ட பின்பே
அவ்வினங்கள் ஓடிவிடும் ........

பூக்கின்ற பூவில்
பொங்குகின்ற தேனை
ஏமாற்றும் வண்டு
இது இயல்பான ஒன்று ......

இருப்பதை தேடி
அலையும் உலகம்
இழந்த பின்பே
பிறக்கும் கலகம்.........

தூக்கி பேசியவன்
தூற்றி பேசுகிறான்
தோளாய் இருந்தவன்
காளை இழுக்கிறான் .......

சிரித்த முகம் எல்லாம்
வெறுத்து பேசுது
சிலிர்த்த முகத்தால்
அதட்டல் செய்யுது ......

கைகூப்பி வணங்கியவர்
கைதட்டி அழைக்கிறார்
பல்லாக்கு தூக்கிஎல்லாம்
பல்லை கடிக்கிறார் .......

வறுமையும் வெறுமையும்
சொத்தாய் போனதால்
சொந்தபந்தம் எல்லாம்
அத்தோடு வாழுது .......

கிழட்டு சிங்கம்கூட
கீரிட பார்க்குது
கிண்டல் வார்த்தைகளால் என்னை
கேலியும் செய்யுது ........

பணம்தானே உலகிலே
பலமென ஆனது
பலதர மனிதரை
பாழாய் படுத்துது ........

வாடிய மலரின்
வாழ்க்கை பயணமாய்
வாழ்விது ஆனது
வசந்தங்கள் போனது ........

நிலையிது தொடர்வது
சாத்தியமில்லை
நிச்சயம் இதுவே
நிரந்தரமில்லை ......

எழுதியவர் : வினாயகமுருகன் (3-Jun-14, 1:52 pm)
பார்வை : 121

மேலே