உழவனின் ஒருநாள் வாழ்க்கை

அதிகாலை வேலையில்
அசைந்தாடும் தென்றலில்
பொதிசுமக்கும் சிங்கம் போல்
நஞ்சை நிலத்தை தேடிக்கொண்டு
பொடிநடையா போகிறான் !...

புழுதி கண்ட பூமியில்
பொட்டல் காட்டின் வீதியில்
பாடுபடும் உழவன் ஒருவன்
பசிக்கு தின்ன ஏதுமின்றி
பருகி குளிர நீருமின்றி
மண் வாசனையில்
மனதை குளித்து
ஈர காற்றில் ஏற்பிடிக்க ஏங்குகிறான் !...

கருணை கொண்ட வருணனே
வறண்ட மண்ணை வாரி தழுவும்
உழவன் வயிறை நிரப்ப
இன்று மட்டும்
பொழியச்செய்யும்
யாசகத்தை தருவாயோ !...
உயிர் பிழைக்க விடுவாயோ !...

பருவனாளில் பொய்த்த நீயோ
பருவம் இன்றி பருகிக்கொள்ள
வருணன் ஆணை ஏற்று இன்று
வயலின் அணையை வழியச்செய்ய
வருகை தந்தது மேககூட்டம் !...
கருமேகம் சூழ்ந்து நிற்க
கதிரவனோ பயந்து நிற்க
உருமிக்கொண்டு இசையெழுப்ப
விழி இமைகள் படமெடுக்க
விரைந்து வந்து உயிர் கொடுக்க
காற்றில் மெல்ல கை சிலிர்க்க
கர்வம் இன்றி வந்தது !...

தழுவி நின்ற மேகங்களை
தரை இறங்க தலையசைக்கும்
மயிலினங்கள் நடனம் புரிய
குயிளினங்கள் கூட்டை சேர
கால இடைவெளி கொடுத்தது
மனதை வருடும் மேகக் காற்று !...
மனிதில் பதியும் வாடைக்காற்று !...

பொட்டல் காட்டை பூக்கசெய்ய
புல்வெளி நுனியை சிலிர்க்க வைக்க
தூறல் போடும் சாரல் மழை
முத்து முத்தாய் வீழ்ந்தது
உழவன் மனதோ குளிர்ந்தது
முத்து மழை சத்து கொண்டு
அருவியாய் ஊற்றியது !...

மாரி பெய்த மயக்கத்தில்
பாதி பசியின் கிறக்கத்தில்
ஏற்தொடுத்து
விதைவிதைத்து
மனம் மகிழ
மாலையிலே திரும்பினான் வீடு !...
மகத்தான உழவன் ஒருவன் !...

எழுதியவர் : பிரபாகரன் (3-Jun-14, 12:54 pm)
பார்வை : 416

மேலே