மண்ணு மட்டும் இல்லனா - இராஜ்குமார்

( அப்பா என்னிடம் )....
ராத்திரி எல்லாம் தூங்காம
அப்படி என்னடா எழுதுற
தூங்கி எழுந்து
பல்லக் கூட வெளக்காம
இப்ப பேனா எதுக்கு எடுக்குற
ஒழுங்கா படிக்க வக்கில்ல
இப்ப என்ன எழுதி கிழிக்குற
எழுந்து வாடா எரும
போய் மாட்ட புடுச்சுக் கட்டு
சொல்ல சொல்ல கேக்காம
அங்க என்னடா பார்வ ..
அந்த புள்ள அங்க இல்ல
அது படிக்க போய் பல நேரமாச்சி
என் மூஞ்ச மொரைக்காம
போய் பொலப்ப பார்ரா..
இப்படியே இருந்தா
ஒண்ணுத்துக்கும் ஒதவா
மண்ணா தாண்ட போவ ..
************************************************
(அம்மா பொதுவாய் ... )....
காலையில இவருக்கு
வேற வேலை இல்ல
இவன திட்றதே
வேலையா போச்சு
**************************************************
(நான் மாட்ட புடுச்சிகிட்டே )
அப்பா
நான் எழுதி
நீங்க கிழிச்சி போடும்
தாளை எடுத்து படித்து
என்னில் என்னவள் ஆனவள் அவள் ..
அவளுக்கு தெரியும் இவை ..
இதோ சொல்கிறேன் ..
மண்ணா போறது என்ன தப்பா.
இல்லவே இல்லை ..
மண்ணு மட்டும் இல்லனா .....
காலு வைக்க தடமில்ல
காத்து வீச மரமுமில்ல
ஒதுங்கி நிக்க நிழலே இல்ல ..!!
ஓடி ஒளிய புதரும் இல்ல
ருசித்து மகிழ பழமும் இல்ல
இங்கு வாசம் வீச மலரே இல்ல ..!!
மண் வாசம் வீசும் மகிமை இல்ல
ஆத்தா கோலம் போட வாசல் இல்ல..
கொழந்த தின்ன மண்ணே இல்ல ..!!
ஊத்து சுரக்க கெணறு இல்ல
ஆற்றை தடுக்க அணையும் இல்ல
கடலின் ஓரம் கரையே இல்ல ..!!
மாடு தின்ன புல் இல்ல
பயிறு வைக்க நிலமே இல்ல ..!!
வண்டி செல்ல வழியும் இல்ல
வாழ்வில் பல வசதி இல்ல ..!!
காதலி கொலுசின் கானம் இல்ல
கூந்தலில் வாழ மலருக்கு வாய்ப்பும் இல்ல
காதல சொல்ல வழியே இல்ல ..!!
சுகமா தூங்க வீடு இல்ல - ஏன்
நிக்க கூட இடமே இல்ல ..!!
இன்னும் இருக்கு பல சேதி
படிமம் எனும் வடிவங்களில் ..!!
மண்ணு மட்டும் இல்லனா ....!
மூச்சு காத்து முழுசா இல்ல
இறுதியில் எனை
எடுத்து புதைக்க
இடமே இல்ல ...
-- இராஜ்குமார் ..
==============================================
எதற்கும் உதவா மண் என சொல்லும் தந்தைக்கு சொல்லும் நம்பிக்கை வரிகள்
===============================================