இயல்பு == வெண்பா

சிலந்தி வலையினிலே சிக்குகின்ற பூச்சி
குளவி எனினும் அளறி அலன்று
திடுக்குற்று போராடி திண்டாடல் போலே
இடுக்கண் எவர்க்கும் இயல்பு.
இல.2
சிலந்தி வலையினிலே சிக்குகின்ற பூச்சி
குளவி எனினும் கொடுக்கு பலத்தை
இழந்து பரிதவிக்கும் இன்னலே யார்க்கும்
வழக்காகும் வாழ்க்கைக் கணக்கு.