வேண்டுதல் வேண்டாமை
அறிவு மிதக்கும் சொற்கள் வேண்டாம்
ஆளை மயக்கும் அழகும் வேண்டாம்
அக்கம்பக்கம் மரியாதை வேண்டாம்
அடுத்தவர் மதிக்கும் செல்வம் வேண்டாம்
அமுதும் பாலும் தெளிதேனும் வேண்டாம்...
அன்பாக பகைவனுக்கும் இரங்க வேண்டும்
அள்ளிக் கொடுக்கும் கரங்கள் வேண்டும்
ஆதிஅந்தமில்லா இறையருள் வேண்டும்
அள்ளக் குறையாத ஞானம் வேண்டும்
வேண்டுவது வேண்டாத குணம் வேண்டும்...