நினைவூட்டலும்,போட்டியும் - பொள்ளாச்சி அபி
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்..!
இதனை வாசிக்கும் தோழர்கள் தயவு செய்து முழுமையாக வாசிக்கவும்.!
தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் போடி-மாலன் அறக்கட்டளை இணைந்து,சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப் படுகிறது.!
சிறுகதைகள் எதனைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.
கதைகளை தெளிவான கையெழுத்தில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.அல்லது மின் அஞ்சலிலும் அனுப்பலாம்.
தேர்வு செய்யப் படும் முதல் மூன்று இடங்கள் பெற்ற கதைகளுக்கு, எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில், கவுரவமான பரிசுத் தொகையும் உண்டு.
அனுப்ப வேண்டிய முகவரி-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
புத்துயிர் புத்தக மையம்.
14.புதிய பேருந்து நிலையம்,
கம்பம்-625516
----------
கதைகள் அனுப்பவேண்டிய இறுதி நாள்.ஜூன் -20-2014-
குறிப்பு- மின் அஞ்சல் முகவரி தளத்தில் நேரடியாக பதிவு செய்ய முடியாது என்பதால்.இதனை வாசிக்கும் தோழர்கள், தனி விடுகை விடாமல், படைப்பின் கருத்துப் பகுதியிலேயே உங்கள் விருப்பத்தை தெரிவித்தால், தொடர்ந்து உங்களுக்கு தனிவிடுகையில் மின் அஞ்சல் முகவரியை அனுப்பி வைக்கிறேன்.!
மேலும்,சிறுகதைகள் எழுதும் உங்கள் நண்பர்களுக்காக,இதனை பகிர்ந்து கொண்டால் இன்னும் மகிழ்வேன்.
இதுபோல மற்ற போட்டிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்ட தகவல்கள் இருந்தாலும்,அவ்வபோது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே..!
பொதுவான போட்டி..
அனைவருக்கும் சம வாய்ப்பு ..!
வாருங்கள் தோழர்களே..,
உங்கள் திறமைகள் உலகுக்கு உதவட்டும்.!
-------------------------
தோழர்களே..! இதேபோல் தினமலர் நாளிதழ் சார்பாக டி.வி.ஆர்.நினைவு சிறுகதைப் போட்டி ஒன்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்பவர்கள் ஏற்க்கனவே பிரசுரமான கதைகளை அனுப்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு ஊக்கபரிசுகளும் உண்டு.
இந்தப் போட்டியில் இருக்கும் ஒரே ஒரு சிறிய சிக்கல் என்னவெனில்,தினமலர் சார்பில் வெளியிடப் படும் வாரமலரில் வெளியாகியுள்ள போட்டி அறிவிப்பு பக்கத்தில் உள்ள முகவரி கூப்பனை வெட்டி ஒட்டி அனுப்பவேண்டும்,
கடந்த ஞாயிறன்று பார்க்காமல் விட்ட தோழர்கள்,வரும் ஞாயிறன்று வெளியாகும் தினமலர் இதழை வாங்கிப் பார்க்கவும்.அதிலும் அறிவிப்பு மற்றும் கூப்பன் வரும் என்றே இணைக்கிறேன்.
கதைகள் அனுப்பவேண்டிய இறுதி நாள்.ஜூன்.30.
உங்கள் முயற்சிகளுக்கும்,வெற்றிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்களே..!
மீண்டும் சந்திப்போம்.! வெற்றியின் பாதைகள் குறித்து சிந்திப்போம்.
அன்புடன்
பொள்ளாச்சி அபி.