மதிதொலைத்த மானுடம்

விளைநிலத்தில் வீடுக்கட்டி
மொட்டை மாடி பயிர்
செய்கிறான்.

சத்தான பழத்தை சக்கரத்தில்
வைத்து நசுக்கிவிட்டு
எழுமிச்சை படம்போட்ட விசம்
குடிக்கின்றான்.

மரத்தையெல்லாம் வெட்டி
கதவுகள் செய்துவிட்டு
காற்றுக்காக கதவை திறந்து
வைக்கின்றான்.

அன்னையை காப்பகத்தில் விட்டுவிட்டு
அனாதைக்கு இல்லம்
திறக்கின்றான்.

பூமியில இருக்கின்ற உறவெல்லாம்
சாகடிக்க விட்டுவிட்டு
வேறுகோளத்தில் உயிர் தேடி
பறக்கின்றான்.

ஆறறிவை பயன்படுத்தா விட்டுவிட்டு
ஏழாம் அறிவிற்கு ஏங்குகிறான்
மனிதன்.

எழுதியவர் : பசப்பி (5-Jun-14, 11:09 am)
பார்வை : 113

மேலே