தாயின் மடியில்
![](https://eluthu.com/images/loading.gif)
மடி சாய்த்து ,தோள் சுமந்து - உன்
உடல் பரிசத்தில் என் உறக்கம்
விழித்தெழுந்து அழும் என்னை
அன்போடு உன் அரவணைப்பு
நீ தூங்காத காலம் எனக்காக
விழித்திருந்ததை நான் மறக்கவில்லை
உன் உதிரத்தின் பால் கூட
வெள்ளையாக உன் மனம் போல்
என் கள்ளமில்லா சிரிப்பு கூட உன்னை
களிப்பில் ஆக்கியது கணக்கில்லை
இன்னும் என்னை சீராட்டுவதில்
உன்னை விட யாரால் முடியும்
உன் வாழ்கையும் அல்லவா - நீ
என்னோடு கழித்தாய்
தினம் சந்திரனை சாட்சியாக்கி
எனக்கு நீ உணவு ஊட்டினாய்
உன் மடி மீது உறங்கிய காலம்
எனக்கு ஒரு வசந்த காலம்
அம்மா !
நீதான் என் இறுதி வரை
எனக்கு வசந்த காலம் !
ஸ்ரீவை.காதர்.