காதலெனும் ஒருதலை ராகம் 555

என்னுயிரே...
தினம் வெண்ணிலவை
ரசித்த என்னை...
உன்னை நேசிக்க
வைத்தவள் நீதானடி...
அமைதியான உன்
புன்னகையும்...
அலைபாயாத
உன் விழிகளும்...
என்னை
உன்னவனாக்கியதடி...
பூக்களை ரசித்து வசந்த
ராகம் பாடிய என்னை...
காதல் என்னும் ஒருதலை ராகம்
பாட வைத்தாயடி...
எப்போதும் நண்பர்களோடு
திரிந்த என்னை...
உன்னை நினைத்து
தனிமையில் பேசவும்...
தனிமையை நேசிக்கவும்
கற்று தந்தாயடி...
காலம் கடந்தால் மறைந்து
போகும் அழகிற்காக இல்லையடி...
என்றும் அழியாத
பல காவியம் பாடும்...
காதலுக்காக...
உன்னை
விரும்புகிறேனடி...
என்னுயிரே
உன் அமைதியான...
புன்னகையை
மட்டுமே தருகிறாயடி...
என்னை காணும்
போதெல்லாம்...
உன் புன்னகையின்
வார்த்தைகளை...
நான் எப்படி
அறிவேன்...
ஒருமுறை உன் மௌனத்தை
கலைத்து பேசிவிடு...
உன்னில் நான் இருகிறேனா
இல்லையா என்று...
காத்திருகிறேனடி
நான் காதலுடன்.....