காதலின் பாதையில்

பணி முடித்து பயணம், என்னவளோடு…
நீண்ட சாலை,
நெருங்கி படர்ந்த மரங்கள்..
வீசும் காற்றில் உஸ்ணம் இல்லை..
ஆனாலும் வெப்பம் உணர்கிறேன் நான்…
தோள் உரச நடை பயணம்…

“இரவு முழுவதும் வேண்டும் இறைவா
இந்த இனிய பயணம்” வேண்டி கொள்கிறேன் நான்…

அவள் மனம் சொல்லும் மொழியை,
விழிகளில் பார்த்து மொழி பெயர்த்து கொள்கிறேன்..
அவளும் தான் !..

நெருங்கி நடக்கிறோம்..
என் விரல் சற்று நகர்ந்து அவள் விரல்களில் பட…
ஒரு முறை என் விழி பார்த்து குனிந்து கொள்கிறாள்…
விரல்கள் மட்டும் அணைத்து கொள்கிறது…

விரல்களின் தாபம் என் உடல் எங்கும் படர
என் ஆண்மை கொஞ்சம் அசைந்து போகிறது..
என்னவளின் தோள் பற்ற
விரல் அணைப்பை விடுவித்து அணைத்துக் கொள்கிறேன்..

பனி படர்ந்த அந்த மாலை வேலை மட்டும்
எங்களை வேடிக்கை பார்க்கிறது..

எழுதியவர் : Mahalakshmi (6-Jun-14, 10:24 am)
பார்வை : 111

மேலே