கடவுளின் மறுபக்கம்

மண்சொர்க்கமா மிந்த
**** மண்சொர்க்கம் ஒருநாளில்
விண்சொர்க்கம் தன்னை
**** விஞ்சிவிடும் என்பதாலோ
பிழைப்பிழையாய் பிழைப்பிழையாய்
*****கணிதங்கள் குறித்துவைக்க
காலக் கிழவனின்
*****காதுக்குள் ளுரைத்தாயோ..?

தேனைச் சுமக்காமல்
*****தீயைச் சுமந்திருநத
புரட்சிப் பூக்களை
***** பொசுக்கிப் புதைத்தாயோ
புலிரத்தம் உனக்கு
***** புணணிய தீ்ர்த்தமோ
நரிவஞ்சம் வெல்வதுதான்
***** நாயகன்உன் ராஜ்ஜியமோ..?

வாழக் கூடாதவர்களை
*****வக்கணையாய் வாழவிடடு
வாழ முடியாதவர்களை
*****வேதனையில் இழுப்பறித்து
வசந்த மொட்டுகளின்
*****வளர்காம்பை கிள்ளிவிட்டு
வாழ்க்கை ஓவியமாய்
*****வரைந்து வியந்தாயோ..?

விதியென்னும் தலைப்பில்
*****விளையாட்டாய் நீயெழுதும்
வாழ்க்கை உனக்கொரு
***** விடுகதையோ? தொடர்கதையோ?
வாழ்க்கை ஒரு வனமோ?
*****வேந்தனே நீயங்கு
வேடனோ, மூடனோ,
*****விசித்திரமானவனோ..?

சாத்தானின் வேதங்கள்
****சரித்தித்தில் நிலைக்கிறது
சத்தியத்தின் கோபுரங்கள்
****சரியும் பயம் தெரிகிறது
கடவுளின் மறுபக்கம
*****கருப்பாய் இருக்கிறது- என்
கவிதையின் மறுபக்கம்
*****கனலாய்ச் சிவக்கிறது..! (2013)


(('கடவுளின் நிழல்கள்' நூலிலிருந்து)

எழுதியவர் : கவித்தாசபாபதி (6-Jun-14, 5:08 pm)
பார்வை : 110

மேலே