விழித்திடு உழைப்பாலே உயர்ந்திடு
விதியோடு விளையாடு
மதியோடு சதிராடு
விதை போல முளைபோடு
மனமொத்த அன்போடு...!
கருவுக்குள் குழந்தை போல்
கண்மூடி கிடக்காதே
மான் குட்டிப்போலவும்
துள்ளித் துள்ளி குதிக்காதே
மழை பெய்தால் வெள்ளம் பாரு
சகதிக்குள் நம்ம வீடு
சகதிக்குள் வாழ்ந்தாலும்
மனம் மட்டும் வெள்ளையா நீ வாழு
வெள்ளை உள்ளம் இங்கு
பலருக்கு இல்லை! இல்லை !!
அதனாலே நாட்டில் பெருந்தொல்லை!!
வெளியில வெள்ளை உள்ளத்தில் இல்லை!
உளைப்பாளியெல்லாம் ஓட்டாண்டியாகுறோம்
அஞ்சுக்கும் பத்துக்கும்
பஞ்சா தான் பறக்குறோம்
ஏணிப் படியா குனிந்து குனிந்து
பணக்காரனை முதலாளியாக்குறோம்
வேளைக்கு வேலை எண்ணி
மூலைக்கு மூலை
பேசித்தான் மூளை கெட்டு
மயக்கத்தில் கிடக்குறோம் !
பொழுதானா போதும்
ரோட்டோரம் தவிக்குறோம் !
போதாக்குறைக்கு போதையில
மூழ்கி வாழ்வையே அழிக்கிறோம்!
படிக்கட்டா வாழும் தோழா !!
ஒத்துமையா வாழ்ந்திடாம
திட்டம் தீட்டி தடுக்குதோர் கூட்டம் !!
மொத்தமா விழகி நின்னா
முதலாளி வாழ்க்கை
அந்தரத்தில் தொங்கும் பாரு ...!!