எது அழகு

எது அழகு..........
பூமிக்கும் வானுக்கும் இடையே
நீர்ச்சரம் தொடுக்கும் மழையோ...
வீதி எங்கும் முத்துகளின்
சிதறலாய் விழுந்த துளிகளோ.....
பச்சை மின்மினிகளாய் உதிரும் இலைகளோ...
மழை தேவதையின் நடனமோ....
நீர் துளிகள் கொலுசாய்
சப்தமிட்டு பாடும் ஜதியோ....
சாலையில் இருந்தும் பயனிக்காத
ஒற்றை கால் மரமோ...
குடைப்பிடிக்காமல் குளித்துக்
கொன்டிருக்கும் மலரோ....
இல்லை இல்லை...
இவையனைத்தையும் ரசித்து நிற்கும்
எனதிரு விழிகளின் முழு நிலவே
என்னவளே
என்றைக்கும் என் விழிகளுக்கு
நீதானடி அழகு....