கண்ணீர் கடிதம்

கண்ணீர் கடிதம்.....


என் இதயம் திருடிய
இனியவனுக்கு.....
கண்ணீர் முத்தமிட்ட இந்த
காகிதத்தாள்களில் -என்
காதலைச் சொல்லி
கடிதம் எழுதுகிறேன்......


கைப்பிடித்த மறுதினமே,
கண்கலங்க வைத்து,
கடல் தாண்டிச் சென்றாயே!
கண்ணா நீ அங்கு நலமா?

காதலைச் சுமந்து வரும் இந்த
காகிதத்தாள்கள் -உந்தன்
கைவிரல் கோதிடும் போது-என்
கண்ணீர் பூக்களைப் பற்றி
கதை கதையாய் சொல்லிடும்!

உன் விழி தீண்டிய
முதல் நொடி......
உன் விரல் பிடித்த
மணவறை.......
இப்படி ஒவ்வொரு நிமிடமும்
என்னுள்..
நிழற்படமாய் பதிவானதை
நீ அறிவாயா?


கண்ணசைவில் காதல் சொல்லி
கண்ணிமைக்கும் நேரத்தில் என்னிடம்
பிரிவைச் சொல்லி.....
கண்ணீரை பரிசாய் தந்தவனே!

சிறகொடிந்த பறவையாய்...
சிதைந்து கொண்டிருக்கிறேன்!
உதிர்ந்த மலராய்....
உயிரற்ற உடலாய்...
உனை காண காத்திருக்கிறேன்
கண்ணா எப்போது வருவாய் நீ?

காதலுடன் நான்.......

எழுதியவர் : நிஸா (7-Jun-14, 11:46 pm)
பார்வை : 128

மேலே