என் காதலிக்கு தாலாட்டு

வழி மூடி தூங்கிவிடு
வண்ண மயில் தோகையிள் நான் விசிறி விடுவேனடி
என் செல்லமே நீ உறங்கு !!

மெதுவாய் நீ விடும் மூச்சும் அழகு
முழு உடலும் மறைக்கும் போர்வையும் அழகடி
என் அழகு ராணியே நீ உறங்கு!!

என் மடிமேல் உன்னை வைத்து
உன்னை பார்த்து ரசிப்பேனடி
என் ராசாத்தியே நீ உறங்கு!!

பச்சை வண்ண போர்வைக்குள்
பஞ்சு மெத்தையில் தூங்குடி
என் பஞ்சவர்ண கிளியே நீ உறங்கு!!

என் கன்னத்தில் கை வைத்து
உன் அழகு கன்னத்தை ரசிப்பேனடி
என் கண்மணியே நீ உறங்கு!!

விடிய விடிய என் விழி மூடாமல்
உன் அழகு விழியை பார்ப்பேனடி
என் கயல்விழியே நீ உறங்கு!!

முத்தான ஓர பல்லைக் காட்டி தூங்கும்
ஓர பல்லுக்கு முத்தமடி
என் முத்தழகியே நீ உறங்கு!!

என் விரல் கொண்டு அழகு விழியை மறைக்கும்
அழகு கூந்தலை நான் வருடிவிடுவேனடி
என் பட்டு குட்டியே நீ உறங்கு!!

உன் அழகு மூக்கில்
அழகு குட்டி மூக்குத்திக்கு முத்தமடி
என் தங்கமே நீ உறங்கு!!

என் வாழ்வு முடியும் வரை நீ தூங்கும்
அழகை ரசிக்க உன்னிடம் வரம் கேட்பேனடி
என் தேவதையே நீ உறங்கு!!

எழுதியவர் : கோபி (8-Jun-14, 5:06 pm)
பார்வை : 320

மேலே