பாசமும் வேசமும்

ஒரு நதி
தன் விதி தேடுது
அதன் கெதி
எவன் சதியானதோ ?


மதி இழந்து
அவன் துதி பாடுது
விதி இதுவென்று
அவன் முகம் தேடுது


இதய வயலில்
இரக்க விதைகள்
உதடு வழியால்
உதிர்த்த மலர்கள் எங்கே ?
அவள் மனம் தேடுது
அவன் ஏனோ
விலை போனது!


பாசத்தை கொடுத்தான்
பருகினாள் தேவி
விசமாக மாறி
வதைப்பது ஏனோ ?

வஞ்சக நெஞ்சனை
நெஞ்சினில் சுமக்கிறாள்
கொடுமையைச் செய்தாலும்
கோவிலாய் மதிக்கிறாள்
பாசமும் வேசமும்
பகுக்காமேலே நகர்கிறாள்...!!

தரிசனம் தந்தவர்
தரணியில் நல்லவர்
இறைவாய் நினைத்தே
இன்னுமின்னும் துதிக்கிறாள்
அவனையே நினைத்து
அவளையே இழுக்கிறாள்.

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (8-Jun-14, 5:31 pm)
பார்வை : 84

மேலே