நவீன ரோமியோ ஜூலியட் காதல் காவியம் -4

வாழ்க்கை வானில் பறக்கும் விமானம்
போல் பறந்து கொண்டு இருந்தது.நான் என் பள்ளி
படிப்புகளை முடித்தேன்.நான் என் பள்ளி நாட்களில்
பல நண்பர்களை சந்தித்து உள்ளேன்.
நான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில்
தேர்ச்சி பெற்றதால் என்னுடைய பொறியியல்
படிப்பிற்காக சென்னை செல்ல நேர்ந்தது.
நானும் என் தந்தையும் சென்னை நோக்கி
சென்று கொண்டிருந்தோம்.கல்லூரியில் நான் என்
பெயரை பதிவு செய்து விட்டு வந்த பொழுது என்
தந்தை ஒருவரிடம் பேசி கொண்டிருந்தார்.அருகே
அழகிய மங்கை நின்றுகொண்டு இருந்தாள்.
நான் அவர்கள் அருகில் சென்றேன்.என்
தந்தை என்னிடம் "யாருன்னு தெரியுதா?"சுப்பு
அங்கிள்டா!"என்றார் .என் கடந்த கால வாழ்க்கை
என் நினைவுக்கு வந்தது.சட்டென்று மழை சாரல்
அடிக்க தொடங்கியது.
அவர் அருகில் நிற்கும் பெண் ஜானு
என்பது எனக்கு தெரிந்தது.நான் மகிழ்ச்சியில் ஆட
தொடங்கினேன்.நாங்கள் இருவரும் சேர வேண்டும் என்பது கடவுளின் செயல்.எங்கள் காதல் தொடர்ந்தது.
பல வருடங்கள் கழிந்தன . பெற்றோர்களின் சம்மதத்தின் பிறகு எங்கள் திருமணம் நடந்தது.நான் இப்பொழுது software solutions என்னும் கம்பெனியில் பணி புரிந்து வருகிறேன்.
நான் அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும் நேரம்..என் கைப்பேசி ஒலி எழுபியது.நானும் எடுத்தேன்."தம்பி!நான் யாரு?எங்க இருக்கேன்?எதுவும் உனக்கு தேவையில்லை.உன் மனைவி ஜானுவின் வாழ்க்கை என் கையில் உள்ளது"என்றவுடன் இணைப்பு துண்டிக்க பட்டது.
நான் என் வீட்டிற்கு வேகமாய் சென்றேன்.என் ஜானு அங்கு இல்லை.என் வாழ்க்கையில் பயத்தை முதன்முதலாய் அனுபவித்தேன்.திக்!திக்!என்று என் இதயம் துடித்தது.
என்ன நடந்தது?என் காதல் தொடருமா????????????????????????