அ ஃறினை மனிதர்கள்

பயணிகள் கவனத்திற்கு,எர்ணாகுளத்தில் இருந்து ஈரோடு,திருச்சிராப்பள்ளி,தஞ்சாவூர் வழியாக காரைக்கால் வரை செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இன்னும் சிறிது நேரத்தில் ஒன்றாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படப் போகிறது.துஜானே வாலே .........என்று தொடர் அறிவிப்பு திருச்சி சந்திப்பில் ஒலித்துக்கொண்டிருந்தது.சார் ஒரு நாகூர் ... ன்னு கேட்டவரே க்யூவின் இடையில் நுழைந்தான் பிரபாகரன் .ஹலோ க்யூ ல நில்லுங்க .....என்று ஒட்டு மொத்தக் குரலும் ஒலிக்க....சார் லேட் ஆகுது ..ப்ளீஸ் இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு கிளம்பிடும் என்றான்.அதுக்கு நாங்க என்ன சார் செய்றது நில்லுங்க.ஆமா நூறு ரூபாய் லஞ்சமா கேட்டா ஏன் கேக்காதீங்க?ரோட்டுல யாரும் அடிபட்டு கிடந்தா கண்டுகாதீங்க ஆனா க்யூல ஒருத்தன் நிக்கலேனா மட்டும் ஆளாளுக்கு லா பேசுங்க...என்று புலம்பியவாரே வரிசையில் நின்னு டிக்கெட் வாங்கினான்.அண்ணே அன் ரிசெர்வ் எதுன்னே?என பிளாட்போரத்தில் டிராலியில் விற்பவரிடம் கேட்டு ஏறினான்.உண்மையில் இந்தியா ஒரு சமத்துவ நாடு என்பதற்கு எடுத்துகாட்டு காஸ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை ஓடும் இரயில்களின் அன் ரிசெர்வ் பெட்டி தான்.அனைத்து தரப்பு மக்களுக்கும் இது அடைக்கலம்.தினசரி அலுவலகம்,கல்லூரி,கூலி வேலை செல்பவர்கள்,வயதானவர்கள்,திடீர்பயனத்தால் ரிசெர்வேசென் கிடைக்காமல் பயணிப்பவர்கள்,இப்படி பலர் ...நிற்பதற்கு கூட இடம் இல்லை.ஹெட் போனை காதில் மாட்டி கதவோரம் நின்றான்..செய் இந்த ரயில்வே என்னதான் பன்றானோ அன் ரிசெர்வ் கம்பார்ட்மெண்ட்னா டாய்லெட்ட கழுவ கூட மாட்றாங்க என்று புலம்பினான்.ஆமாம் சார் நாம என்ன ஓசியிலையா போறோம்..என்று பக்கத்தில் இருந்தவர் வெறுப்பில் கூறினார்.பாவம் ரொம்ப நேரம் நின்னு வந்திருப்பார் போல என எண்ணி,ஹெட் போனை கழற்றி விட்டு அப்படியே நடந்தான் ஏதவாது இடம் கிடைக்குமா?என்று ..அன் ரிசெர்வ் முழுவதும் நடந்து விட்டான்....எங்கு நகர்ந்து உட்கார சொல்லிவிடுவானோ என்று சிலர் தூங்குவது போல் கண்ணை மூடி பாவலா செய்தார்கள்.சிலர் மேல லகேஜ் வைக்கும் இடத்தில் சபாநாயகர் போல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இடம் கிடைப்பதாக தெரியவில்லை சரி தஞ்சாவூரில் பாப்போம் எப்டியும் ஆள் இறங்குவாங்க அப்போ உகாந்துருவோம்.சார் நீங்க எங்க இறங்குவீங்க?நீடாமங்கலம் சார்...சார் நீங்க? நாகப்பட்டிணம் ?இவன் விசாரித்ததை பார்த்த ஒரு ஆள் தம்பி நான் தஞ்சாவூர்ல இறங்கிடுவேன்.இங்க உட்காந்துகீங்க என்றார்.தேங்க்ஸ் சார்..என்று சொல்லி அருகில் நின்று வந்தான்.தஞ்சாவூர் ஸ்டேஷன் வந்தடைந்தது,தம்பி உட்காருங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.அநேக கூட்டம் இறங்கி விட்டது.ஜன்னல் ஒர சீட் ...ஹெட்போனைத் தன காதில் மாட்டினான்.சிறிது நேரம் கழித்து சார் இடத்த பார்த்துகங்க ..இதோ வந்துடறேன் ....என்று சொல்லி விட்டு டாய்லெட்டிற்கு சென்றான்.ரயில் கதவின் ஓரத்தில்,வாஸ் பேசின் அருகில் ஒரு திருநங்கை தன் மூக்கை பொத்தியவாறு நின்று கொண்டிருந்தார்.இங்க ஏன் நிக்குறீங்க?உள்ள இடம் இருக்குள்ள?அவள் யாரிடமோ சொல்வது போல் நகர்ந்து செல்லும் தண்டவாளத்தையே பார்த்துக்கொண்டிருந்தால்.ஹலோ உங்கள தாங்க ..என்னையா ?சொல்லுங்க சார்...இல்லம்மா இங்க ஸ்மெல் அடிக்குதுள்ள ..உள்ள இடம் இருக்குள்ள...இல்ல சார் வேணாம் ..நான் இங்கயே இருந்துடறேன்...சொன்னா கேளுங்க போங்க...என்றான்.முதன் முறையாக தங்களையும் மதித்து மரியாதையாக ஒருவர் நடத்துகிறார் என்ற மகிழ்ச்சியில்..வார்த்தைக்கு மதிப்பளித்து சென்றாள்.உள்ளே இருந்து ஒரு குரல் ..இங்கயும் வந்துட்டாங்க....மெட்ராஸ் டிரைன்ல தான் இதுக தொல்ல.. னா னு குரல் நீண்டது.மாப்பிள உன் ஆளு டா என்று சில இளைஞர்கள் பேச்சு..ஏங்க அங்குட்டு போகச் சொல்லுங்க சில பெண்களின் குரல் ...காசுல்லாம் இல்ல.. போ ..இப்படி ஒரு உயிர் வார்த்தையால் வதைபட்டுக் கொண்டிருந்தது.நீங்க உக்காருங்க...தம்பி உங்களுக்கு சேவை பண்ணனும்னா வீட்டுக்கு கூட்டிட்டு போய் பண்ணுங்க ..ஒரு நடுத்தர வயது பெண் குரல்..அதை ஆமோதிப்பது போல கோரசாக பல குரல்கள் ..நீங்க உக்காருங்க.....அவள் உட்கார்ந்த அடுத்த நொடி அனைவரும் எழுந்து பக்கத்து பெட்டிக்கு சென்று விட்டார்கள்.உண்மையில் தன்னை அடித்திருந்தால் கூட பிரபாகரன் இவ்வளவு வேதனைப் பட்டிருக்க மாட்டான்.தன்னால் இன்னொருவரும் அவமானப் பட்டார் என எண்ணி அவன் அந்த திருநங்கை முன் கூனி குறுகி நின்றான்.சார் விடுங்க சார் ..நீங்க ஏன் பீல் பண்றீங்க ...நான் அங்கயே நின்னுக்கிறேன் என்று சொல்லி கழிவறை அருகில் போ நின்றாள்.சிஸ்டர் என்ன மன்னிச்சிருங்க என்னால உங்களுக்கு தேவை இல்லாத அவமானம்..அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் இது ஒன்னும் எங்களுக்கு புதுசு இல்ல சார் பழகிருச்சு..ஒரு ஆள் எங்க வலிய புரிஞ்சு,ஆறுதலா பேசுனீ ங்கலே அது போதும் சார்.இந்த ஆதரவ தான் சார் எதிர் பாக்கிறோம்.நீங்க போய் உள்ள உக்காருங்க சார் ...இல்ல சிஸ்டர் எனக்கு என்னமோ ...கம்பார்ட்மெண்ட் உள்ள தான் ஸ்மெல் அடிக்குது ...அங்கதான் சுத்தம் பண்ணனும் ...
தன் சக மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத இன்னும் எத்தனையோ அ ஃறினை மனிதர்கள் இன்றும் நாகரீக போர்வை போர்த்தி நம்மோடு பயணித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்...
மீண்டும் ஒரு பெரியார் வர வேண்டும் ..என நொந்துகொண்டான்.........

.............................................பார்த்தீபன் திலீபன் .......................................

எழுதியவர் : பார்த்தீபன் திலீபன் (9-Jun-14, 1:02 am)
பார்வை : 213

மேலே