கடவுளின் பலசரக்குக் கடை

வாழ்க்கையின் ராஜபாட் டையில் நான்பல
ஆண்டு களுக்குமுன் நடந்து போகையில்
சொர்க்கத் தின்’பல சரக்கு பண்டக
சாலை' பெயர்ப்பல கைகண் டேனே!

சற்று அருகில் சென்ற போது
கதவுகள் அகலமாக தானாகத் திறந்தன;
உணர்வுக்கு நான்வந்த போது நானங்கே
உள்ளே நின்று கொண்டிருந் தேனே!

தேவதைகள் சிலரங்கே நிற்பதைக் கண்டேன்,
எங்கெங்கும் அவைகள் நின்றுகொண் டிருந்தன!
கூடையை ஒருதேவதை என்கையில் கொடுத்து,
‘மகனே! கவனமாய் வாங்கு‘ என்றதே!

மானிடர்க் குத்தேவை யான அனைத்துமே
அந்த பலசரக்குக் கடையில் இருந்தன;
உன்னால் சுமக்க முடியாத படியிருந்தால்
இன்னும் வாங்க மீண்டும் வரலாமே!

முதலில் கொஞ்சம் ’பொறுமை’ வாங்கினேன்
அதேவரி சையில் ’பாசம்’ இருந்தது,
அதற்குக் கீழே ’புரிதல்’ இருந்தது,
எங்கு சென்றாலும் அவையுனக்கு வேண்டுமே!

பரிசுத்த ஆவியை விட்டுவிட முடியாது,
அதுஅங்கு அனைத்து இடத்திலும் இருக்கிறது;
வாழ்க்கை ஓட்டத் திற்குத் துணையாய்
கொஞ்சம் ’பலமும் துணிவும்’ வேண்டுமே!

என்,பை நிறைந்து கொண்டிருக் கிறது,
ஞாபகம் வந்தது ‘அருட்கருணை‘ வேண்டும்
‘வீடுபேறு‘ கிடைக்கும் இலவசமே! அதனால்
நானும் ‘வீடுபேறு‘ம் தேர்ந்தெடுத் தேனே!

முதலாளி சொல்லிய வண்ணம் வாங்கிய
சரக்கிற்கு நான்பணம் செலுத்த முகப்பு
சாளரம் சென்றேன்! சென்ற போது
அங்கே ‘இறைவணக்கத்‘ தினைப்பார்த் தேனே!

சரக்குப் பைகளை அங்கே வைத்தேன்,
வெளியே சென்றால் பாபம் செய்வேன்
என்றறிவேன்! கடைசியாய் ‘மகிழ்வும் அமைதியும்
நிறையவே அங்குள்ள மாடத்தில் உள்ளனவே!

‘கீதமும் துதி‘யும் அருகருகில் தொங்கி
நிற்கிறது! நானாக எடுத்துக் கொண்டேன்!
எவ்வளவு நான்தர வேண்டு மென்று
அருகிருந்த தேவதை யைக்கேட் டேனே!

தேவதை சிரித்துக் கொண்டே சொன்னது
‘அவைகளை நீசெல்லு மிடமெல்லாம் எடுத்துச்செல்‘
‘குழந்தாய்! இதற்கான விலையைக் கடவுள்
உனக்காக எப்பொழுதோ கொடுத்து விட்டாரே!

Ref: Poem: ‘God’s Groceries’ by Maria Mons.

பொருள் அகராதி:

Patience - பொறுமை, Love - பாசம்
Understanding – புரிதல், Wisdom - ஞானம்
Faith – விசுவாசம், Charity - தர்ம சிந்தனை
Holy Ghost - பரிசுத்த ஆவி, Strength - பலம்
Courage – துணிவு, Grace - அருட் கருணை
Salvation – வீடுபேறு, Prayer - இறை வணக்கம்
Peace – அமைதி, Joy - மகிழ்வு
Song – கீதம், Praise – துதி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-14, 8:32 pm)
பார்வை : 189

மேலே