அறிவுடையவர் மனதாலும் நினைக்காத செயல்கள் - ஆசாரக் கோவை 38

பொய்குறளை வௌவ லழுக்கா றிவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பின்
ஐயம் புகுவித் தருநிரயத் துய்த்திடுந்
தெய்வமுஞ் செற்று விடும். 38 ஆசாரக் கோவை

பொருளுரை:

சந்தேகந் தீர்ந்த அறிவுடையவர்

பொய் பேசுவது,

கோள் சொல்வது,

பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வது,

பொறாமை கொள்வது

ஆகிய நான்கினையும் மனதாலும் நினைக்க மாட்டார்கள்.

அவ்வாறு நினைப்பாராயின் அத்தகைய செயல்கள் இம்மையில் பிச்சை யெடுக்கும்படி வறுமை யடையச் செய்து, மறுமையில் அரிதாகிய நரகத்திலும் செலுத்திவிடும், தெய்வமும் அவர்களை அழித்துவிடும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jun-14, 11:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 90

மேலே