பிரிவென்பது
கதிரவன் ஒன்று தான்...!
தோன்றுவது கிழக்கில் தான்
அவள் அதை காணும் இடம் வேறாக
நான் காணும் இடம் வேறாக
வெளிச்சங்கள் எமக்கு இருளாகிறது
வேதனைகள் எமக்கு உறவாகிறது
பிரிவென்பது அவள் பரிவை
நினைவூட்டுகிறது,
நெருக்கங்கள் இல்லாத போது
நேரங்கள் ஊர்கிறது
ஏதும் அர்த்தங்கள் இல்லாமலே
நெஞ்சங்கள் ஏங்குது, அவளோடு
சேரும் நேரத்திற்காகவே
நினைவென்பது வரமா?
இல்லை சாபமா?
அவள் நினைவுகள் என்னை
சில நேரம் தாலாட்டுது,
பல நேரம் அந்த நினைவுகள்
என்னிடம் வாலாட்டுது
விண் மீன்கள் கண் சிமிட்டும்
ஒவ்வொரு இரவும்,
தென்றல் காற்று தழுவிடும்
ஒவ்வொரு இனிய மாலையும்
என் வரையில் துன்பமே
அவள் வரும் வரையில்
எல்லாம் எனக்கு துச்சமே
என் இல்லத்தரசி சமைக்காத
உணவு கசந்ததே
பசி கூட என்னை துறந்ததே
பார்த்து பறிமாறிடும் அவள்
வளை கரங்கள் வேண்டுமே
வெறும் சோறும் அவள்
வடித்தால் அமிர்தமே
புன்னகைக்கும் இதழ்கள்
எந்த சோகத்தையும் சுகமாக்குமே
புல்லரிக்கும் செய்கைகள்
எந்த நேரத்தையும் சுவையாக்குமே
புரியாத புதிர் போல கண்டாலும்
அறிவேனே அவளை நான் அணு, அணுவாய்
என் வாழ்வு அவள் மீட்டும் அனுராகமே
என் சிரிப்பு அவள் ரசித்திடும் சங்கீதமே
என் இனிப்பு அவள் இதழ் தந்திடும் பூ முத்தமே
என் சந்தோஷம் அவள் வேண்டும் வரமாகுமே
என் தவிப்பு அறிந்து அவள் விரைவில் வந்தால், வாழ்வு நலமாகுமே
ஆடி தள்ளுபடி விற்பனையில் தேவை இல்லை
ஆடி மாதத்தையே தள்ளுபடி செய்யுங்களேன்
அது தானே இங்கு எனக்கு எதிரி யானது
அவள் தாய் வீடு செல்ல ஏதுவானது
என் தனிமைக்கு துணை போனது