அர்த்தமில்லாத அவஸ்தைகள்
நீ
நடந்து போன
திசைகளில்
என்
ஞாபக துண்டுகள் ..
நீ
கிழித்தெறிந்த
காதல் கடிதங்கள்
ஆசையின் அணுகுண்டுகள் ..!!
நீ
பாராட்டாத
என் கவிதைகள் ..
அர்த்தமில்லாத அவஸ்தைகள் ..!!
என் தவிப்பு
நீ தந்த பயிற்சி ...
என் தேடல்
நீ செய்யாத ஊடல் ...
பேசாத உன் மௌனம்
இந்த
ஊமைக்கு கிடைத்த
உற்சாகம் ..!!