நான் ஒரு யாசகன்

இனி யார் மீதும் குற்றம் சுமத்துவது
தார் மீது படுத்துறங்கும்
நானோ
யார் மீதும் குற்றம்
சுமத்த தேவையுமில்லை !...

மண்ணுக்கு போராடும்
மண்புழு இல்லை
மண்ணுக்குள் போய்விடாமல்
மண்புழுவிற்கு இரையாகா இருக்க
போராடும் வெண்புழு !...

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
காகித பூ கேட்டு அல்ல
கையளவு கூழு கேட்டு
வாழை இலையில் வாய் நிறைக்கும்
வள்ளல் பெருமான்களே
சிறிது சேலையிலே சிந்துங்கள்
சிந்திய வெண்மணிகளை
சிறுகச் சேர்க்க காத்திருக்கும்
எச்சிலைக் கூட்டமும் உண்டு
ஆகாரம் இன்றி வாழ்கின்றேன்
தினமும்
நீர் மட்டுமே ஆகாரமாகக் கொண்டு !...

செவ்வாயைப் பற்றி தினம் பேசும்
சிந்தனை சிற்பிகளே
எந்தன் திருவாயைக் கொஞ்சம்
நினைத்து பாருங்கள்
விண்வெளியில் விடியலை கேட்கும்
மானிட பிறவி அல்ல
புல்வெளியில்
துயில் கொள்ள ஆசை கொள்கின்றேன்

காசு கொடுத்து
கல்வியை கற்கும்
வசதி என்னிடமில்லை
ஆனால் என்னைவிட
வாழ்க்கையை கற்க யாருமில்லை !...
கருவறை இருட்டிலிருந்து வந்த நான்
வாழ்வதும் இருட்டில் தான்
இருட்டில் தொடங்கிய வாழ்க்கை
விடியாமல் முடிந்திடுமோ ?...

ஒருநாள் பொழுதில்
எல்லாம் முடியுமென்றால்
திருநாள் ஒன்றில் தான்
நற்காலம் தொடங்குமேன்றால்
உண்மையில் உன் நிலைகூட
தலைகீழாய் போகிறது
உரிமையை இழந்து
உள்ளமோ தவிக்கிறது
மனிதாபமானத்தின்
பொருள் என்ன தெரிந்தது
மனிதனின் அடையாளம்
எதுவென புரிந்தது !..

கேட்பவை எல்லாம் கிடைக்கும்
இக்காலத்தில்
கேட்டும் கிடைக்காதது ஏன் ?...
கேட்டுப் பார்ப்பது வீண் !...

எழுதியவர் : பிரபாகரன் (10-Jun-14, 7:20 am)
பார்வை : 137

மேலே