தொலைந்த சுயம்
நெல் விளைந்த
மண்ணை
மில் விளைய
தாரை வார்துவிட்டது.
கிராமம் !
விவசாயத்தை
அண்டை மாநிலங்களுக்கு
கடத்தி வருகிறது
உழவனின் வறுமை !
சேற்றில் உழவனை
கால் வைக்க விடமால்
அவனது சோற்றில்
கை வைத்து வருகிறது
வறட்சியீன் புரட்சி
கிராமங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
வெட்டி விழுங்கி
பெருத்து வருகின்றன
நகரங்கள் !
தொலைந்த சுயம் !