வாழ்வு ஒரு தேடல்

வாழ்வு ஒரு தேடல்தானே
பிறந்த நொடியின் முதலாய்
விழிகளில் துவங்கியதுதான்
தேவைக்கு தேடலுமுண்டு
தேடாமல் சேர்வதுமுண்டு
கிட்டாமல் போவதுமுண்டு

ஏக்கத்தில் வாடுவதுமுண்டு
வறுமையில் கொடிது கண்டு
செல்வத்தில் இலக்குமுண்டு
உழைத்து முயல்வதுமுண்டு
கல்வியில் நோக்கம் கொண்டு
தேடிப் போய் பயில்வதுண்டு

வருமான தேவைக்காக தன்
விருப்பங்கள் ஒதுக்கிவிட்டு
வெறுப்பேதும் காட்டாமலே
வெளிநாடும் செல்வதுண்டு
திருமண உறவுத் தேடலில்
ஆண் பெண் தேடலுமுண்டு

திருமணத்திற்குப் பின்னே
சந்ததி எதிர்பார்ப்பதுண்டு
பிள்ளைகள் வளர்ப்பதிலும்
பதைப்பும் தொடர்வதுண்டு
பொறுப்புகள் முன் நின்றிட
சாதிக்க வெறி கூடுவதுண்டு

இளமை குறைய வயோதிக
அச்சம் அச்சுறுத்துவதுண்டு
நோயால் துன்புறுகையிலே
நலம் வேண்டி தவிப்பதுண்டு
இப்படியே வாடலும் கூடவே
தேடலுமாய் ஏக்கங்களுடனே

சில வலிகளுடன் முயன்றே
தொட்டுவிட்ட வெற்றிகளை
காெண்டாடி மகிழ்ந்திருந்தே
கடந்த யாவும் மீண்டு வராது
இந்த நிமிடமிதை நெகிழ்ந்தே

களித்திருப்பாேம் மாசில்லா
நட்போடும் குறை காணாத
உறவோடு உணர்வுகளாேடு
வாழனும் வாழும் நாட்களில்
புரிந்தே மகிழ்ந்து வாழ்வோம்

எழுதியவர் : bramma (10-Jun-14, 1:15 pm)
Tanglish : vaazvu oru thedal
பார்வை : 115

மேலே