இயற்கை அழகு

வண்ணத்து பூச்சிகள்
விதவிதமாய்
தோட்டத்திலே பறந்திருக்க
எண்ணத்து சிறகுகள்
அழகழகாய் அந்த காட்சியை
வர்ணிக்க

கன்னத்து குழி குழைய
வடிவடிவாய் ஒரு குழந்தை
அங்கு நின்று சிரிக்க

உலகத்து உவகையெல்லாம்
ஒருங்கே என்னுள் தோன்றி
கொப்புளிக்க

வாழ்க்கை இத்தனை
அற்புதமானதா என்று
நான் வியக்க

வாழவேண்டும் பல காலம்
இத்தகைய அழகிய காட்சிகளை
கண்டு ரசிக்க

எத்தனை துன்பம் வரினும்
வாழ்வினிலே, இழக்காதே
ரசனை உணர்வை

என்ன ஆனாலும் மறுக்காதே
உனக்கு நீயே வாழும்
அனுபவத்தை

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (10-Jun-14, 4:39 pm)
சேர்த்தது : nimminimmi
Tanglish : iyarkai alagu
பார்வை : 144

மேலே