தாய்

துன்பங்கள் உன்னை
சூழும் போதினிலே
கண்மணியே

இந்த தாய் முகத்தை
நினைத்து ஆறுதல்
கொள்வாயே

நானாக நானிருப்பதில்லை
எந்தன் கண்ணின் மணியான
நீ துயர் கொண்டாலே

தீ வந்து உன்னை சூழ்ந்தால்
நீராக நான் இருப்பேன் உன்னருகே

சூழ்நிலைகள் உன்னை தவித்திட
செய்தால், சூழல்களை மாற்றி
அமைத்திடுவேன் உனக்காக

தூறல்கள் உன் தலை நனைத்தால்
குடை கொண்டு காத்திடுவேன் நீ
நனையாமலே

உந்தன் நெற்றியிலே நான் தந்த
முத்தங்கள், உன்னை காத்திடவே
நான் வைத்த அச்சாரங்கள்

உனக்காக வாழ்கின்றேன், உன்னை
காக்க சுவாசிக்கின்றேன்

என் அன்பே, நீ எதை நினைத்தும்
வருந்தாதே, வருத்தத்தில் எனை
நினைக்காமல் இருந்திடாதே

மேலுள்ள படத்தில் இருப்பது எந்தன் கண்மணியே, நான் அவன் அன்னையே, இருபத்து ஒரு வயதான இந்த இளம் வாலிபனின் அன்னை நானே, அதில் எனக்கு சொல்ல முடியாத இன்பமே....! என்ன தவம் செய்தேனோ? இவனை மகனாக நான் பெற்றெடுக்க...!

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (10-Jun-14, 4:11 pm)
Tanglish : thaay
பார்வை : 164

மேலே