காதல் தோல்வி கவிதைகள் 2

உன் விழி மொழி புரிவதற்குள்
என் கனிமொழியே என்னை பிரிந்தாய்
என் மன கனமொழியை
எந்த மொழி கொண்டு
மொழி பெயர்க்க

மௌனம் என்னும் ஆயுதம் கொண்டு
மனதை கிழிக்க முடியும் என
கற்று தந்தவள் நீ

மௌனம் சம்மதம் அல்ல
அதன் எதிர்பதம் உணர்ந்தேன் உன்னால்

எழுதியவர் : ருத்ரன் (10-Jun-14, 3:51 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 56

மேலே