நெல்லிக்கையின் மகிமைகள்

நெல்லி உடலுக்கு இளமை தரும் ஓர் ஒப்பற்ற கனி. நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என்று கூறுகின்றனர்.
நெல்லியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. தாது
விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக இக்கனி பயன் படுத்தப்படுகிறது. காயகல்பம் இக்கனியில் இருந்து தான் உருவாக்கப்படுகிறது.

இதில் வைட்டமின் ‘சி’ அதிகளவில் உள்ளது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம். 100 கிராம நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஆகியவை போதிய அளவு
அடங்கியுள்ளன. பல் நோய், அஜீரணம், மூட்டுவலி மற்றும் பார்வை குறைபாட்டிற்கு ஏற்ற அருமருந்தாகும். நீண்ட ஆயிளுக்கு, நாளும்
நெல்லிச்சாறு அருந்தினால், இதைப்போல் அருமருந்து வேறில்லை. பசியின்மையை விலக்கி, பசியை உணரவைக்கும். மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும்.

நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும். நெல்லியை காய வைத்தாலும், அதிலுள்ள வைட்டமின் ‘சி’ சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது இந்த சக்தி அதிகரிக்கிறது.

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பது மருத்துவ கூற்று. நவீன ஆராய்ச்சி மூலமும் இதை உணர வைத்திருக்கின்றனர். ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள
நச்சுப் பொருட்களை அகற்றி, நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும்
இளமையுடன் இருக்க செய்கிறது. இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது.

எழுதியவர் : (10-Jun-14, 5:17 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 77

சிறந்த கட்டுரைகள்

மேலே