எனக்கென்ற தனியறையில்
அவள் அறிமுகம் தேடி அலைந்தவன்...
இன்று அழுகைமுகத்தோடு..
அடைந்து கிடக்கிறேன்.. புலம்பியபடியே...!
எனக்கென்ற தனியறையில்.
அவள் காதல் வேண்டி அலைந்தவன்..
இன்று அவள் கால்தடம் ஓசை கேட்டு..
பதறுகிறேன்.. சற்று மூச்சு வாங்கியபடியே!
அவளும் நானும் மட்டும்..
தனிமையான பல சந்திப்புகளை கடந்தும்..
உரையாட தைரியம் இல்லாத எனக்கு..
வெகு நாட்கள் கழித்து..
சந்தோசம் என் சட்டையை பிடித்தது..!
ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்?
என்று..
அவள் குழிவிழுந்த கன்னமும்..
நான் விழுந்த அவள் கண்களும்..
சற்று சிரித்தபடி.. புருவம் தூக்கி கேட்கும் போது..!
அடுத்த தனிமைக்காக காத்திருக்கிறேன்..
பதில் சொல்ல தெரியாமல்...
என் ஒருதலை காதலோடு...!