வரைந்திட்ட ஓவியமா
வரைந்திட்ட ஓவியமா
வளைந்திட்ட நாணமா !
ஈர்த்திடும் பெண்ணழகா
ஈன்றெடுத்த தேவதையா !
சிரித்திடும் நாணலா
சிங்கார சிலையிவளா !
மயக்கிடும் மாதரசியா
மண்ணின் பேரழகியா !
அடக்கத்தின் இமயமா
அலங்கரித்த அன்னமா !
கனகுமணி காரிகையா
கவர்ந்திடும் கன்னியா !
குறையிலா குணவதியா
குலுங்கிடும் பூச்செடியா !
அழகின் விளைநிலமா
அழகின் இலக்கணமா !
புன்னகைக்கும் சிற்பமா
புவியின் முதல்அழகியா !
பொன்னுக்கு விளம்பரமா
பொங்கிடும் இன்ப ஊற்றா !
முடிவெடுங்கள் நீங்களே
முடிவாய் நீங்களும்தான் !
பழனி குமார்