பிழை செய்தா பிரம்மன்
இடியுடன் கூடிய மழையில்
வானம் கிழிந்து புத்தகம்
ஒன்று விழுந்தது
எடுத்து படித்த நான்
சிரித்து முடித்தேன் – காரணம்
தமிழில் பிழை நிறைந்த புத்தகம்
பிரம்மச்சுவடியாம்.
ஆத்திரம் கொண்ட நான்
ஆணையிட்டேன் பிரம்மனை
அழைத்துவர.
நீ செய்யும் தவறுக்கு
தண்டனை எங்களுக்கா?
பிழையின்றி எழுத
என் நண்பர் யார் வேண்டும் கேள்,
பல விஷயங்களை விவாதிக்க அழைக்கிறான் ஒருவன்,
யாழ்ப்பாணதில் இருந்துகொண்டு தமிழை
யாசிக்கிறான் ஒருவன்,
மௌனத்தை உரித்தெல செய்கிறான் ஒருவன்,
சிட்டுகுருவியாய் சிரகடிகிரன் ஒருவன்,
தாயன போதும் தாயின் மடி தேடுகிறாள் ஒருத்தி,
தனிமையில் பேச சிநேகத்துடன் அழைக்கிறாள் ஒருத்தி,
டிரக்குல்ல விட்டு உயிரை தேடுகிறான் ஒருவன்,
தான் காதலிக்காமலே பலர் காதலுக்கு
கவிதை பல எழுதுகிறான் ஒருவன்,
கடல் கடந்து சென்றும் தமிழை
காதலிக்கிறான் ஒருவன்,
யார் வேண்டும் கேள்
இன்னும் எத்தனையோ
அருமையான நட்புகள் என்னிடம் இருக்க,
வெட்கமின்றி நீ வா,
தயங்காமல் தமிழ் எழுத
கற்று தருவர் உனக்கு,
இனிமேலும் நீ செய்யும் தவறுக்கு
தண்டனை எங்களுக்கு வேண்டாம்,
தவறு செய்யும் உன்னை தண்டிக்க
இவர்களில் யார் வருவார் தெரியாது.