இறுதி ஊர்வலம்

முதன் முதலில் நீ
என்னை கடந்த
ஒரு நொடியில் புரிந்துக்கொண்டேனடி
எனக்காக பிறந்தவள் நீதான் என்று!

நடமாடும் சூரியகாந்தி பூவானேன்
உன் முகம் பார்த்தே என் விழிகள்
உன்னை நோக்கியே
என் காலின் பயணம்!

இதுவரை புரியாத உணர்வு
உன்னருகில் உணர்ந்தேனடி!

கண்ணாடி பார்க்கிறேன்
உன்முகம் காட்டுகிறது!

புத்தகம் வாசிக்கிறேன்
உனது பெயர் மட்டும்!

உறங்கிபோகிறேன்
கனவெல்லாம் நீ!
விழித்தெழுகிறேன்
நினைவெல்லாம் நீ!
யாவும் நீயாகிபோனாயடி!

அடி பெண்ணே!
இரவில் திருடும் கள்வர்கள் மத்தியில்
இரவை திருடும் காதலராகி போனோம்!

முதல் முறை கேட்கிறேன்
உனது கன்னம் தொட்டுபார்க்க
எனது உதடுகளால்!

காதலில் இன்பம் காண வைத்தவள் நீ
இன்று துன்பமும் காண வைத்து விட்டாய்!

ஊரே பார்க்க
மாலையிட ஆசைப்பட்டேன்
அடி பெண்ணே!
ஊரே சேர்ந்து
மாலையிட வைத்து விட்டாய்
எனது இறுதி ஊர்வலத்தில்.......!

எழுதியவர் : கார்த்திக்கேயன் (11-Jun-14, 1:57 pm)
பார்வை : 445

மேலே