பரிசம்

ஓடையில தண்ணி தூக்கி
ஓடி புட்டா என்ன தாக்கி
பச்சை புள்ள ஓட்டத்துல
தச்சி புட்ட நெஞ்சில் முள்ல

பட்டாம்பூச்சி போல வந்து
பாட்டெழுத வச்சவளே
முழு நிலா நான் பாத்தா
அங்கயும் முறசிக்கிடே நிக்குறயே

பள்ளிக்கூடம் போகயில
பாவிமக அழகில்ல இப்ப
பச்சக்கிளி போல வந்து
பறகுறா என் முன்ன

பட்டி காட்ட தாண்டலையே
பட்டணமும் போகலையே
பான்ஸ் பவுடர் போட்டதுகா
வெள்ளகாரி ஆகிபுட்டா

ம்ம்ம் ..................

ஆசையும் தான் கூடிடிச்சு
மீசையும் தான் ஏறிடிச்சு
பரிசா உன்ன தாடி புள்ள
பரிசம் போட நானும் வரேன்

எழுதியவர் : கவியரசன் (11-Jun-14, 5:47 pm)
Tanglish : parisam
பார்வை : 219

மேலே