நான்
நான்...
கழிவுகளை முகமாக
கொண்டவன்...
யாவரும் வெருக்கும்
குணமுடையவன்...
முயற்சியின்றி முயலாமை
என்று சொல்லி மூலையில்
முடங்கி கிடப்பவன்...
சிற்பியின் உலி போல்
வலிகளை பெற்றும்
எழிச்சிற்பத்தை பெற
முடியாதவன்...
அழுகுறள் கேட்டே
கண் விழிப்பவன்...
பார்ப்பவர்கள் உமிழும்
சிறப்புடையவன்...
பழகியவர்களுக்கு எதுமே
செய்யாதவன்...
மழைத்துளியிடன் காதலை
சொல்லியவன்...
கற்பனையில் வாழ்பவன்...
கவிதைகளை கொலை
செய்பவன்...
வெறுப்பை மட்டுமே
நேசிப்பவன்...
தனிமையில் வாழ்பவன்...
பொருளாதாரத்தில் பின்தங்கிய
கடை கோடி மனித பிறவிகளில்
ஈனப் பிறவியானவன்...
உலகை வெறுக்கும்
வினோதமானவன்...
இயற்கையை நம்பும்
நம்பிக்கையுடையவன்...
கரம் பற்றிய இதயமே
கைகழுவிய கையாளாதவன்...
தோள் சாய்ந்த தோழமையும்
என்னை விட்டு தொலைவில்
செல்லும் தொல்லையானவன்...
சாவை அழைத்து
விருந்தோம்பல் செய்யும்
கலாச்சார காப்பாளன்...
வாழத் தகுதியில்லாதவன்...