அந்த பிரம்மனுக்கும் இப்படியா-நாகூர் லெத்தீப்

அந்த பிரம்மனுக்கு
பிரம்மை பிடித்ததாமே
வைத்தியரை தேடி
பூலோகத்தில்.......!

ரம்பையும் ஊர்வசியும்
என்ன செய்தார்களோ
குழப்பத்தில் பிரம்மர்.......!

எப்பொழுதும்
இப்படித்தானா
பெண்கள் ஆண்களை
பிரம்மியாக மாற்றுவது.......!

ஒரே குழப்பமும்
கூச்சலும் தேவலோகத்தில்
ரம்பையினால்.......!

ரம்பையின் நடனத்தை
தேவர்களும் கண்டு ரசிக்க
சிந்தனையில்
சித்திர குப்தா........!

உயிரை பறிக்கும்
தொழிலை
விடப்போகிராராமே
என்னகொடும சார் இது........!

உன்னாலே நான் கேட்டேன்
என்னாலே நீ கெட்டாய்
சண்டையிடும் தேவர்கள்
நடுவிலே புன்னகை புரியும்
தேவலோக கண்ணிகள்.........!

பல பிரச்சனைக்கு
நடுவே தேவலோக சபை
ஒன்று கூடியது ரம்பையும்
வழக்கம் போல் நடனமாடினால்........!


கொஞ்சம் சிரிங்க பாஸ்

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

ஆவதும் பெண்ணாலே அழிவதும்..........

எழுதியவர் : லெத்தீப் (12-Jun-14, 9:59 am)
பார்வை : 80

மேலே