மறக்கத்தான் நினைக்கிறன்
வெந்நீர் ஊற்றி பார்த்தேன்
வேகவில்லை
தளிர்த்து துளிர்த்து
பூத்து நிற்கிறது
கோடரி கொண்டு
கொய்து கொன்றும் பார்த்தேன்
ஆலமரமாய் விழுது
விட்டு நிற்கிறது
இந்த காதல்
இன்னும் என்னை
என்ன
செய்ய போகிறது ?
என்னையே
உணவாய் தின்று
அது தன்னை
என்னுள் வளர்த்து கொள்கிறதே !