கவிதை பிறந்தது

கவிதை பிறந்தது.

ஆளரவம் அற்ற
வீதியின் நடுவே
ஆழ்ந்த நித்திரை
செய்யுது தெருநாய்!

பூனைதன் குட்டியை
சீண்டிச் சீண்டி
சீறுவ தெப்படியென
சொல்லித் கொடுக்குது!!

முருங்கை மரத்தின்
சுருங்கிய பூக்கள்
முற்றத்தில் விழுந்ததில்
முடிந்தது காய்கனவு!!!.

சாளரம் காட்டும்
காட்சியில் லயித்ததில்
காலம் கரைந்தது
கவிதை பிறந்தது!!!!.

எழுதியவர் : தா .ஜோ. ஜூலியஸ் (12-Jun-14, 11:31 am)
பார்வை : 102

மேலே